தடைகளை மீறியும் கொழும்பு பொரளை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
கொழும்பு பொரளை பிரதேசத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த இடத்துக்கு வந்த மற்றுமொரு தரப்பினர் அந்த நிகழ்வை நடத்த வேண்டாம் என்று கூறியதால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இடத்தில் பொலிஸார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதக அறிய முடிகின்றது.
தடைகளை மீறியும் கொழும்பு பொரளை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது
மனித சங்கலி பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டு அதனுள் நினைவேந்தல் சுடர் ஏற்றப்பட்டது
வண.பிதா மா.சக்திவேல், சட்டத்தரணி சுவஸ்திகா அருளிலிங்கம், சந்தியா எக்னெலிகொட உள்ளிட்டத் தரப்பினர் பங்கேற்று நினைவுச் சுடர் ஏற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்
புலிகளுக்கான நினைவேந்தல் கொழும்பில் வேண்டாம் என்று கூறி நினைவேந்தல் நிகழ்வில் குறித்த குழுவினர் குழப்பம் விளைவித்துள்ளனர்.
இதன்போது ஊடகவியலாளர்கள், பொலிஸார், அருட்தந்தையர், சட்டத்தரணிகள் உள்ளிட்டத் தரப்பினர் மீது குழப்பம் விளைவித்த தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் கொழும்பு பொரளை பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.