கொழும்பு பொருளாதார மத்திய நிலையத்தில் திருட்டு!!

0
77

கொழும்பு மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்திற்கு உதவிபுரிந்த மேலும் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடகம மற்றும் ஹோமாகம பகுதியை சேர்ந்த 32 மற்றும் 45 வயதுடைய இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீகொடை பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரை சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி மீகொடை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அங்குள்ள வர்த்தக நிலையயொன்றில் காசாளராக பணியாற்றிய பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 45 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.