கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை!

0
361

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள தவறியவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக ஐந்து மத்திய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த மத்திய நிலையங்களை இரவு 10.00 மணி வரை திறந்து வைப்பதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகள் தருவிக்கப்படவுள்ளன. இலங்கைக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க சர்வதேச நாடுகள் தயாராக உள்ளன.

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

சகல குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளை ஏற்ற எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.