கொழும்பு மாநகர சபை மேஜர் வேட்பாளராக முஜிபுர் ரஹ்மான்

0
176

கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்யவுள்ளார். கொழும்பு மாநகரசையானது ஐக்கிய தேசியக் கட்சியின் ‘மினி’ அரசியல் கோட்டையாகும். இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து யானை சின்னத்தில் கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிடவுள்ளது.