கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில்
சர்வதேச ஆசிரியர் தினம்

0
361

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினம் நகிழ்வுகள் உயர்தர வகுப்பு மாணவர்களின் ஏற்பாட்டில் அதிபர் க.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.

நற்பிரஜைகளை உருவாக்கும் பணி ஆசிரியர் பணி என்ற தொனிப்பொருளில் இவ் ஆசிரியர் தினம் நடைபெற்றது.

நிகழ்வில் பாடசாலை முன்றலில் வாத்தியங்கள் முழங்க ஆசிரியர்கள் மலர் மாலை அணிவித்து விழா மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு
மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் இடம்பெற்று ஆசிரியர்களினால் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டது.

ஆசிரியர்களினால் பாடல், நடனம், விளையாட்டு, நகைச்சுவை உட்பட பல்வேறு ஆற்றுகைகள் செய்து காண்பிக்கப்பட்டன.

மாணவர்களால் ஆசிரியர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கான பரிசுகளும் இதன்போது வழங்கப்பட்டது.