கோப்பாய் சந்தி சமிக்ஞை விளக்கு கடந்த இரண்டு வாரங்களாக செயிலிழப்பு!

0
235

யாழ்ப்பாணம்பருத்தித்துறை கோப்பாய் சந்தியில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்கிற்கான செக்கன் மணிக்கூண்டு ( Countdown Timer) இரண்டு வாரங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது.

கோப்பாய் சந்தியில் நான்கு சமிக்ஞை விளக்கு தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் கோப்பாய் சந்தியில் இருந்து யாழ்நகர பக்கமாகவும் மற்யைது யாழ்நகர பக்கத்தில் இருந்து கோப்பாய் சந்தி பக்கமாகவும் உள்ள இரண்டு சமிக்ஞை தொகுதிகளின் செக்கன் மணிக்கூண்டுகள் இவ்வாறு பழுதடைந்த நிலையில் உள்ளது.

இதனால் வாகனச் சாரதிகள் சமிக்ஞை விளக்குகள் செயற்படுகின்றனவா இல்லையா என்ற சந்தேகத்தில் உடனே வீதியை கடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி வீதி சமிக்ஞைக்குரிய செக்கன் மணிக்கூண்டின் பழுதினை திருத்தியமைப்பது அவசியமாகும்.