கோப்பாய் துயிலுமில்லப்பகுதியில் சிரமதானப் பணியைத் தடுக்க பொலிஸார் முயன்றதால் முறுகல்!

0
286

கோப்பாய் மாவீரர் துயிலுமpல்லப்பகுதியில் இன்று காலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது சற்று முறுகல் நிலை ஏற்பட்டது.

கோப்பாய் மாவீரர் துயிலுமpல்லத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் துயிலுமpல்லத்துக்கு முன்பாகவுள்ள பகுதியில் சில வருடங்களாக இடம்பெற்று வருகின்றன.

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவு கூரப்படவுள்ள நிலையில் இந்தப் பகுதியில் இன்றுகாலை சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சிரமதானப் பணிகள் இடம்பெற்றபோது வந்த பொலிஸாரால் சற்று முறுல் நிலை ஏற்பட்டது.