30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கோயில் உடைப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்பு: பொலிஸாரின் விசாரணை மந்தகதியில்

நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில், கோவில் உடைப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இது தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் மந்தகதியிலேயே இருப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோவில் உடைப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. நேற்று முன்தினம் அக்கரப்பத்தனை டயகம் பகுதிகளில் சுமார் 5 கோயில்கள் உடைக்கப்பட்டுள்ளன.

கோயில்களில இருந்த உண்டியல்கள் திருடப்பட்டுள்ளன. அதேபோன்று விக்கிரகங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளும் திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்ஹவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளேன். அவரும் குறித்த பகுதிக்கு விசேட பொலிஸ் குழு ஒன்றை அனுப்பிவைப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோயில்கள் உடைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை. வெறுமனே முறைப்பாடுகளை செய்வதால் மட்டும் எதுவும் நடைபெறாது. அதுமட்டுமன்றி பொலிஸார் கோயில் நிர்வாகத்தினரை மட்டுமே விசாரணைக்கு உட்படுத்துகின்றனர்.

எனவே சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்;காண்பதற்கு விசேட செயற்றிட்டமொன்றை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும்.

அதனைவிடுத்து பொலிஸ் நிலையத்தில் இருக்கின்ற முறைப்பாட்டு புத்தகத்தின் பக்கங்களை நிரப்புவதால் ஒன்றும் நடைபெறாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles