இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் நடாத்தப்படும் ‘ சகவாழ்வின் மூலம் சமூகத்திற்கும் அரச ஊழியர்களுக்கும் இடையிலான பிணைப்பினை வலுப்படுத்தல்’ எனும் தலைப்பில் ‘சகவாழ்வு’ தொடர்பான ஆலோசனை குழு ஒன்றினை ஸ்தாபித்துக் கொள்ளும் வகையில் மாநகர சபை உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான கூட்டம் இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகர ஆணையாளர் என் .மதிவண்ணன் , பிரதி ஆணையாளர். உ .சிவராஜா , பிரதம கணக்காளர் செலன் சிவராஜா , எக்டெட் நிறுவன பிரதி திட்ட முகாமையாளர் கஜேந்திரன் , எப் எஸ் எல் ஜி எ நிறுவன சிரேஸ்ட செயற்திட்ட முகாமையாளர் பிரதீப் பெருமாள் , எப் எஸ் எல் ஜி எ நிறுவன செயற்திட்ட உத்தியோகத்தர்களான அஞ்சனா சௌந்தரி, ஜெயந்தி நடராஜா மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் , மாநகர சபை அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஆலோசனைகளை அடிப்படியாக கொண்டு ஒரு யாப்பினை தயாரித்து அதனை எவ்வாறு செயல்படுத்துவது அதற்கான ஆவணங்கள் தயாரிப்பது அது தொடர்பான ஆவண பரிசீலனை தொடர்பாக கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
சகவாழ்வின் மூலம் சமூகத்திற்கும் அரச ஊழியர்களுக்கும் இடையிலான பிணைப்பினை வலுப்படுத்தல்’ தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடர்பாக மேலதிக விளக்கங்களையும் மாநகர முதல்வர் தியாகராஜ சரவணபவன் தெரிவித்தார்