சங்கானை பிரதேச செயலருக்கு கௌரவிப்பு!

0
247

படைப்பாளுமை தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம் – சங்கானை பிரதேச செயலர்) அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் தொல்புரம் மேற்கு சுழிபுரம் சத்தியமனை நூலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து சிறுவர்களின் கவிதைப் பா உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. விழாவின் கதாநாயகியான திருமதி பிரேமினி பொன்னம்பலம் அவர்கள் “தாட்சாயணி” என்ற புனைபெயரில் தனது எழுத்து பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், கல்விப்புலம் சார்ந்தவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.