மன்னாரிலிருந்து அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று காலை மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து சுமார் 2,000 ற்கு மேற்பட்ட கடலட்டைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
சோதனை சாவடியில் வைத்து இராணுவத்தினரால் குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கடலட்டைகள் அனுமதிப் பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட கடலட்டைகளுடன் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.