யாழ்ப்பாணம் – நெல்லியடிப் பகுதியில், அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இருவர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 4 மாடுகளை வாகனத்தில் இருந்து மீட்ட பொலிஸார், குறித்த வாகனத்தையும் தடுத்துவைத்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலவின் அடிப்படையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.