சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட முயன்ற யாழ் இளைஞர்கள் விளக்கமறியலில்!

0
148

சட்டவிரோதமாக, கப்பல் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டு கப்பலில் சட்டவிரோதமான முறையில் நுழைந்து வெளிநாடு செல்ல முயன்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் யாழ்ப்பாணத்தின் வேலணை, தொண்டைமானாறு, அராலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.