சட்டவிரோத தேர்தல் பிரசார செயல்பாடுகள் தொடர்பில் 100 பேர் கைது!

0
65

சட்டவிரோத தேர்தல் பிரசார செயல்பாடுகள் தொடர்பில் 100 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் 39 சம்பவங்கள் தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காலப்பகுதிக்குள் 8 இலட்சத்துக்கும் அதிகமான சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளன. சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை அகற்றுவதற்காக ஆயிரத்து 592 தொழிலாளர்கள் நாடளாவிய ரீதியில் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.