சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வினால், மாசடையும் காசல்ரீ நீர்த்தேக்கம்

0
115

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ – கெசல்கமுவ ஒயாவில் இடம்பெறும் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வினால் காசல்ரீ நீர்த்தேக்கம் மாசடைவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வானது மிக பாரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கெசல்கமுவ ஒயாவின் நடுப்பகுதியில் கடும் அழமான மாணிக்கக்கல் சுரங்க குழிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நீர்த் தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நன்னீர் மீன் வளர்ப்பிற்கும் பாரிய பாதிப்பு ஏற்படுவதாக நன்னீர் மீன் வளர்ப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பகுதியில் உள்ள ஒரு சிலரின் ஒத்துழைப்புடன் பலாங்கொடை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் உள்ளவர்களே கெசல்கமுவ ஒயாவில் மாணிக்கக்கல் அகழ்வினை முன்னெடுப்பதாக தெரிவிக்கும் பிரதேச மக்கள், பழமை வாய்ந்த கெசல்கமுவ ஒயாவினையும் காசல்ரீ நீர்த்தேக்கம் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பினையும் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.