சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேருக்கு டெங்கு வழக்குத்தாக்கல்!

0
109

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரிப்பணிமனைக்குட்பட்ட 13 பேரிற்கு டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கெதிராக வழக்குத்தாக்கல்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தில் சண்டிலிப்பாய் MOH பிரிவிற்குட்பட்ட அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசங்களான ஆனைக்கோட்டை,மானிப்பாய் மற்றும் சுதுமலை பொது சுகாதார பிரிவுகளில் வேலுப்பிள்ளை.ரதீசன் மேற்பார்வை பொதுச்சுகாதாரப்பரிசோதகரின் ஏற்பாட்டில் நடைபெற்ற
டெங்குகட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பொருட்டு களத்தரிசிப்பில் ஈடுபட்ட பொதுசுசுகாதார பரிசோதகர்கள் ரா.யொனி பிரகலாதன், சு.ஜெகதாசன், கி.அஜந்தன், கு. பாலேந்திரகுமார் ச.பிறின்சன் ம.ஜெயபிரதீப் ஆகியோரினால் இனங்காணப்பட்ட
நுளம்புபெருகும் சூழலை பேணிய 13 வீட்டு உரிமையாளர்களிற்கெதிராக இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது ரூ.16500 தண்டப்பணமாக அறவிடப்பட்டதுடன் , இனிவரும் காலங்களில் இவ்விதம் நடந்துகொண்டால் ஆறுமாத சிறைத்தண்டனைக்குட்படுத்தப்படுவீர்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அத்துடன் இருவரிற்கெதிராக நீதிமன்ற அழைப்பாணை விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிகரித்து வரும் டெங்கினைக் கட்டுப்படுத்த சுகாதாரப்பரிசோதகர்கள் இரவுபகலாக கடுமையாகக செயற்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது