சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவித்திட்டங்கள்!

0
204

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றைய தினம் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வவுனியா வடக்கு அனந்தர்புளியங்குளம், சின்னப்பூவரசங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயம், நாக கண்ணகையம்மன் ஆலயங்களின் கட்டிட பணிக்காக ஒரு இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கேப்பாபிலவு, பிலக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கின்ற பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிக்கு கழிப்பறை திருத்த வேலைக்காக 50,000 ரூபா நிதியும், மின்சார இணைப்புக்காக 30,000 ரூபா நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – உமையாள்புரம் உமாமகேஸ்வரர் தேவஸ்தானத்திற்கு கட்டிட திருப்பணிக்காக 2ம் கட்டமாக 50,000 நிதி வழங்கப்பட்டது.

இந்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் வழங்கி வைத்தார்.