சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ்க் கலாசார மன்றத்தின் வருடாந்த பொங்கல் விழா, இன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது.
இந்தப் பொங்கல் விழா, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில், விசேட பூஜைகளுடன் இடம்பெற்றதை தொடர்ந்து, ஆலய வளாகத்தில், விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் போது, முட்டி உடைத்தல், சாக்கோட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன.