தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். நாளையதினம் கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளையதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் மாணவர்களின் நலன் கருதி, முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் பதில் பாடசாலை எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு முதலாம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.