முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியின் பதிவு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சமத்துவக் கட்சி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட காலம் முதல் இன்று வரை கட்சியின் கணக்கு அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் ஆணைக்குழுவினால் 3 முறை கடிதம் அனுப்பப்பட்டும் பதிலளிக்காத காரணத்தினால் கட்சியின் பதிவு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக டான் செய்திப்பிரிவு அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியபோது, மீள எம்மை அழைத்து கருத்து தெரிவிப்பதாக அவர் பதிலளித்துள்ளார்.
இதனிடையே சமத்துவக்கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.