கொவிட் 19 தொற்று பரவிடும் சவால்மிகு காலத்தில் இலங்கையர்களுக்கு உதவிடும் நோக்கத்துடன் இலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனர்களான மொபிடெல் தமது சமூக பொறுப்புணர்வு முன்னெடுப்பினை நீடித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையின் இரண்டு நிறுவனங்களுக்கு 7500 முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கியது.
மொபிடெலின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரி சஷிக செனரத் 5000 முகக்கவசங்களை சமஸ்த லங்கா தஹம் சுவந்த நிலையத்துக்கு கையளித்தார். இந்நன்கொடையின் முக்கிய நோக்கம் இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களினிடையே இம்முகக்கவசங்களை பகிர்ந்தளிப்பதாகும். அத்தோடு 2500 முகக்கவசங்கள் கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலைக்குக் கையளிக்கப்பட்டது. இது சிறைச்சாலை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கையளிக்கப்பட்டது.
தேசிய மொபைல் சேவை வழங்குனர் என்ற வகையில் மொபிடெல் கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்திட தேசிய ரீதியாக எடுக்கப்பட்ட பல முன்னெடுப்புக்களுக்கு உதவிசெய்துள்ளது. மேலும் மொபிடெல் மற்றும் SLT, மனுசத் தெரனவுடன் கூட்டிணைந்து 1 மில்லியன் முகக்கவசங்களை பகிர்ந்தளித்தது.