சமுர்த்தி அதிஸ்ட இலாபச் சீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு வீடு

0
158

சமுர்த்தி திணைக்களத்தின், சமுர்த்தி சௌபாக்கிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ், 2022ஆம் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி அதிஷ்ட இலாப சீட்டின் மூலம் தெரிவு
செய்யப்பட்ட பயனாளியொருவருக்கான வீடு இன்று மட்டக்களப்பில் கையளிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டுக்கான மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் நாவற்குடா தெற்கு கிராம சேவை உத்தியோகத்தர்
பிரிவில் வசிக்கும் வீட்டுத் திட்டப் பயனாளியான செல்லப்பிள்ளை என்பவருக்கே வீடு கையளிக்கப்பட்டது.
வீட்டைக் கையளிக்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஸ்ரீயாந்தினி தலைமையில் நடைபெற்றது.
அதிதிகளாக மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.பரமலிங்கம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் வி. பிறைசூரி, சமுர்த்தி
கருத்திட்ட முகாமையாளர் உத்தியோகத்தர் சந்திரா தேவி உதயகுமார், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.அருணாகரன், வலய உதவியாளர் டி.பிரபாகரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் புஷ்பராணி பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிக்கான வீட்டினை கையளித்தனர்.