“சமுர்த்தி அபிமானி” கண்காட்சி யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் ஆரம்பம்!

0
156

“சமுர்த்தி அபிமானி” விற்பனைக் கண்காட்சியும் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் ஆரம்பம்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் “சமுர்த்தி அபிமானி” விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் யாழ்ப்பாண பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதம கணக்காளர் திரு.என்.எஸ்.ஆர்.சிவரூபன் மற்றும் கணக்காளர் திரு.இ.முருகதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டதோடு, உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

மேலும், இவ் விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் நாளைய தினமும் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.