சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை !

0
5

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி தொழில் வாய்ப்பு விளம்பரங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மேலும் தெரிவிக்கையில், 

கடந்த நாட்களில் பொதுமக்கள் மத்தியில் இவ்வாறான மோசடிகள் அதிகம் இடம்பெறுகின்றன. அண்மையில், இலங்கை மத்திய வங்கி, தமது சின்னத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சின்னத்தைப் பயன்படுத்தியும் பல போலி விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இவ்வாறான போலி விளம்பரங்கள் மூலம் பொதுமக்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை பெற்று அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.