சமூக மட்ட குழுக்களின் தலைவர்களிற்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தால், செயலமர்வு

0
124

‘மகிழ்ச்சியான குடும்பம் மகிழ்ச்சியான சமூகம்’ எனும் கருப்பொருளின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமூகம் மட்ட குழுத் தலைவர்களுக்கு
மத்தியஸ்த நுட்பம் மற்றும் தந்துரோபாயம் தொடர்பான பயிற்சி செயலமர்வு, கடந்த ஒக்டோபர் மாதம் 18ம் திகதி மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்
நடத்தப்பட்டது
இதன் இரண்டாம் கட்ட செயற்பாடாக, தெரிவு செய்யப்பட்ட பங்கு பற்றுனர்களை கொண்டு இன்று மட்டக்களப்பு ‘வண்ணாத்திப் பூச்சி சமாதான பூங்கா’ நிலையத்தில்,
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாவுள் ஹக் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ்
மாதிரி மத்தியஸ்த சபைகளுக்கான செயல்முறை விளக்கம் இன்று இடம்பெற்றது.
மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஆஷாத் தலைமையில் மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பிறின்சி வினோதன் மற்றும்
ஜீவிதா நதிசன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற சமூகம் மட்ட குழுத் தலைவர்களுக்கு மத்தியஸ்த நுட்பம் மற்றும் தந்துரோபாயம் தொடர்பான இன்றைய பயிற்சி
செயலமர்வில் மாவட்ட மத்தியஸ்த இணைப்பாளர் எம்.ஏ.எம். அஜூன் வளவாளராகக் கலந்து கொண்டார்.