அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லபட்டு மீட்கப்பட்ட எருமை மாடுகள் தொடர்பில் அம்பாறை சம்மாந்துறை பொலிஸார் புலன் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியினூடாக எருமை மாடுகள் கடத்தப்படுவதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத்திற்கு
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம், சிறிய ரக லொறி ஒன்றில் இருந்து எருமை மாடுகள் மீட்கப்பட்டன.
அத்தோடு இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.