அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட உயிரிழந்துள்ளார்.
கசிப்பு பெரல் வெடித்ததில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வளத்தாப்பிட்டியைச் சேர்ந்து 56 வயதுடைய ஏகாம்பரம் தங்கவேல் என்பவர் ஆவர்.
வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த நபர் தீயிட்டதாக, கூறி உயிரிழந்தவரின் உறவினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசானைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.