அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச மாற்றுத் திறனாளிகளின் புதுயுகம் அமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளின் கௌரவிப்பும் விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்று இருந்தன.
இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச மாற்றுத் திறனாளிகளின் புதுயுகம் அமைப்பின் செயலாளர் ஜே.கேசரிவர்மனின் தலைமையில் திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.
இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இருந்து மாற்று திறனாளிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி கலாசார மத்திய நிலையத்தினை வந்தடைந்திருந்தன. இதனைத் தொடர்ந்து அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கபட்டு மங்கள விளகேற்றலுடன் மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்சிகள் என்பன இடம்பெற்று இருந்தன.
இதனைத் தொடர்ந்து 15 மாற்றுத் திறனாளிகள் மாலை அணிவித்து அதிதிகளால்
கௌரவிக்கப்பட்டு இருந்ததுடன் மாற்றும் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன் அம்மன் மகளிர் இல்ல பவூண்டேஷன் பணிப்பாளர் வே.வாமதேவன் மற்றும் அனுசரனை அமைப்புக்களான திருக்கோவில் பிரதேச செயலக சமூர்த்திப் பிரிவு வலுவிழந்தோர் தாங்குவம் சுவீஸ் அமைப்பு திருக்கோவில் பிரதேசசபை போன்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் மாற்றுத் திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.