ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க வெள்ளக்கிழமை (18) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த அவர் முதலில் பல்கலைக்கழக மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுப்பாய்வு ஆய்வு கூடத்தை (Analytical Laboratory) திறந்துவைத்த சாகல ரத்னாயக்க, பல்கலைக்கழக மைதானத்தில் கட்டப்பட்டு வரும் கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளையும் பார்வையிட்டார்.
அதன் பின்னர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடலில் சாகல ரத்நாயக்க இணைந்து கொண்டார்.