யாழ். நாவற்குழிக்கு முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று நாவற்குழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதிக்கு பிரித் ஓதி வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றவுள்ளன.
இந்த வழிபாட்டை நடத்துவதற்காகவே தென்னிலங்கையில் இருந்து சவேந்திர சில்வாவுடன், நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.