பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும் மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.