சாய்ந்தமருதில் உள்ள உணவகங்களில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, பாவனைக்கு உதவாத உணவுகள் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி சகிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே. மதன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு சோதனையில் ஈடுபட்டனர்.
உணவகங்கள், வெதுப்பகங்கள், மரக்கறி, மீன் விற்பனை நிலையங்கள், பலசரக்கு கடைகள், இனிப்பு கடைகள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் சில நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் காலங்களில் உணவு சுகாதாரம் மீதான கண்காணிப்பு தொடரும் என்பதுடன் இறுக்கமான சட்ட நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார பிரிவினர் எச்சரித்தனர்.
இவ்வாறான சோதனை நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.