மக்களை வழிப்படுத்தி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் சாய்ந்தமருது சுகாதார தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரிகள் , படையினர்கள், பொலிஸார் இணைந்து இரவு நேர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது வாகனங்கள் மருந்தகங்கள், மற்றும் வர்த்தக நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றவேண்டிய அவசியம் குறித்தும் ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
