சாய்ந்தமருதுவைத்தியசாலையை மேம்படுத்த நடவடிக்கை

0
198

அம்பாறை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு மருந்துகளைப் பொதி செய்யும் உறைகள் ஒருதொகுதி அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க நாபீர் பவுண்டேஸன் தலைவரும் ஈ.சி.எம். குறூப் நிறுவன தவிசாளருமான கலாநிதி.நாபீர்
அன்பளிப்பை வழங்கி வைத்தார்.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர். ஏ.எல்.எம்.அஜ்வத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வைத்திய அதிகாரிகளான டொக்டர் எம் எச் கே சனூஸ், டொக்டர் எம்.ஏ.கே.சனூஸ், டொக்டர்
எஸ் .ஜே. ஜஹான், அபிவிருத்திச் சங்க செயலாளர் எம்.ஐ.எம். சதாத் உட்பட அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாட்டின் பொருளாதார நிலையால் வைத்தியசாலைகளில் நிலவும் வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் இயங்கும் தமது சொந்த ஊர் வைத்தியசாலை தேவைகளை நிறைவு செய்வதில் நாபீர் பௌண்டேஸன் அக்கறை செலுத்தி உ
டனடி நடவடிக்கை எடுத்தமைக்காக நாபீர் அவர்களுக்கு சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சாய்ந்தமருது அல் அக்ஸா பள்ளிவாசல் புனரமைப்பிற்கான 1 இலட்சம் ரூபா காசோலையும் இதன் போது நாபீர் பவுண்டேஸன் தலைவரும் ஈ.சி.எம். குறூப் நிறுவன தவிசாளருமான கலாநிதி. நாபீரினால்
பள்ளிவாசல் நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.