அம்பாறை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வருடாந்த சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி ஜே.சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் இம்முறை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சாய்ந்தமருது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளான டொக்டர் எம்.எச்.கே.சனூஸ் ,டொக்டர் எம்.கே.கரிமாசனூஸ் ஆகியோரின் புதல்வி பாத்திமா நுஹாவை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் வைத்திய அதிகாரிகளான டொக்டர் எஸ்.ஸே.ஜஹான் ,டொக்டர் அஜந்தா, டொக்டர் நௌஷாட், தாதியமேற்பார்வை உத்தியோகத்தர் நஸ்ரூதீன் முகாமைத்துவ சேவை உதவியாளர் ஏ.புஹாது ஆகியோர் கலந்து கொண்டனர்.