சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு
உபகரணங்கள் கையளிப்பு

0
175

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு நீண்ட காலத் தேவையாக காணப்பட்ட நோயாளர் பராமரிப்புக்குரிய ஒரு தொகுதி உபகரணங்கள், தனவந்தர் ஒருவரின் அனுசரணையுடன் நேற்று வழங்கப்பட்டது.

வைத்தியசாலை சமூகத்தின் வேண்டுகோளையேற்று மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த பட்டயக் கணக்காளர் எம்.வை.எம்.இப்றாஹிம் என்பவரே தனது சொந்த நிதியில் குறித்த உபகரணங்களை கொள்வனவு செய்து வழங்கியுள்ளார்.

உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.கே.சனூஸ் தலைமையில் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ், வைத்தியசாலை அபிவிருத்தி சபை செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் உள்ளிட்ட நிர்வாகத்தினரும் பங்கேற்றிருந்தனர்.