சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
தலைமையில் சிரமதான பணி முன்னெடுப்பு

0
190

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் சிரமதான பணியினை பொலிஸாருடன் இணைந்து பொதுமக்கள் இன்று முன்னெடுத்தனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் துப்பரவு செய்யப்பட்டதுடன்பொலிஸாரினால் பொதுமக்களிற்கான விசேட விழிப்பூட்டல்களும் மேற்கொள்ளப்பட்டதுடன் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சிரமதானத்திற்கு பொலிஸ் நிலைய சுற்றுச்சூழலில் உள்ள பொதுமக்களும் தங்களது ஒத்துழைப்புக்களை சிரமதான செயற்பாட்டிற்கு வழங்கியிருந்ததுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பிரிவு, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு,போக்குவரத்து பிரிவு ,சிறு குற்றத்தடுப்பு பிரிவு ,பெருங் குற்றத்தடுப்பு பிரிவு, சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவு ,என்பன பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.