சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில்
தேசிய பொலிஸ் வார நிகழ்வு

0
169

156ஆவது தேசிய பொலிஸ் தின கொண்டாட்டங்கள் இன்று நாடு பூராவும் கொண்டாடப்பட்டுவருகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் 156ஆவது பொலிஸ் தின நிகழ்வு வெகு சிறப்பாக இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் பொலிஸ் சேவையிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.மைமுனா பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததுடன் பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் குடும்ப உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.