சாரணர் தந்தை பேடன் பவுல் 165வது பிறந்த தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்தா பிரதீபன் தலைமையில் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.
சாரணர் தந்தை பேடன் பவுலின் 165 வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர நீரூற்று
பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பேடன் பவுல் உருவ சிலைக்கு சாரண கழுத்து பட்டி அணிவிக்கப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட சாரண ஆணையாளர் எ.இருதயநாதன் மாவட்ட சாரண உதவி ஆணையாளர்களான ஐ.கிறிஸ்டி பொற்கரன், பெற்றிக். திருமதிதமிழ் செல்வன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.