




சிங்கர் பினான்ஸ் நிறுவனத்தின் 50வது புதிய கிளை இன்று யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு தேசிய கொடி மற்றும் சிங்கர் பினான்ஸ் நிறுவனத்தின் நிறுவன கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டது.
தொடர்ந்து விருந்தினர்களால் கிளை திறந்து வைக்கப்பட்டு சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெற்று நிறுவனத்தின் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சிங்கர் பினான்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துசாந்த் அமலசூரிய, நிறுவன முகாமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.