சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு! – இருவர் படுகாயம்!!

0
498

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, துன்னாலையைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதாகவும், இதன்காரணமாக அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.