சிறார்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்ள எம்மாலான உதிவிகளை அமச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடீக என்றும் மேற்கொண்டு தருவேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகப் பொறுப்பாளர் அம்பலம் இரவிந்திரதாசன் அதற்கான முயற்சிகளை தற்போதும் பெற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொக்குவில் மேற்கு கலைவாணி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் இன்றையதினம் நடைபெற்றன.
இதில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
நாடு தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. ஆனாலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக பல விசேட திட்டங்களையும் செய்து இன்று கற்றல் நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம் இந்த முன்பள்ளி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை நவீன மயப்படுத்த இந்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது பிரதேச முன்பள்ளிகளின் நலன்களில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றர்.
இதனால்தான் தற்போதும் அவர் தனது நிதி ஒதுக்கீட்டில் இந்த முன்பள்ளிக்கும் ஒதுக்கிடு செய்து சிறார்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உரமூட்டியுள்ளார்.
அந்தவகையில் எமது இந்த முன்பள்ளி சிறார்களின் மேம்பாட்டுக்கு நாம் என்றும் துணையாக இருப்பதுடன் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதிலிருந்தும் பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.