சிறிய வர்த்தக நிலையம் பொலிஸ் பாதுகாப்புடன் அகற்றல்!

0
228

நுவரெலியா நோர்வூட் வெஞ்சர் கீழ் பிரிவு தோட்டப் பகுதியில், சிறிய வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர், கூரையின் மீது ஏறி, நோர்வூட் பிரதேச சபைக்கு எதிராக, இன்று ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டமானது, இன்று காலையில் இருந்து முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு, வர்த்தக நிலையத்தை அகற்ற சென்ற அதிகாரிகளுக்கும் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த தோட்டப் பகுதியில் உள்ள, பழமை வாய்ந்த பாடசாலை கட்டிம் ஒன்றில், நாட்டின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ், வெஞ்சர் யோகட் நிறுவனம் ஒன்றை அமைத்து, குறித்த கட்டிடத்தின் நிர்மான பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ள நிலையில், குறித்த கட்டிடத்திற்கு சொந்தமான காணியில், சட்டவிரோதமாக வர்த்தக நிலையம் ஒன்றை, நபர் ஒருவர் நடத்தி வந்த போதிலும், குறித்த காணியை, வெஞ்சர் யோகட் நிருவனத்திற்கு வழங்குமாறு, அம்பகமுவ பிரதேச செயகத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும், குறித்த நபர் காணியை வழங்க மறுப்பு தெரிவித்தமையினால், இன்று, பலத்த பொலிஸ் பாதுகாப்புடன், கட்டடம் அகற்றப்பட்டது.
இதேவேளை, குறித்த வர்த்தக நிலையத்தை, குறித்த காணியில், 1992 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து, தாம் நடத்தி வருவதாகவும், இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில், வாழ்ந்து வருவதாகவும், கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த கட்டிடமானது, வெஞ்சர் தோட்டத்தின் பாடசாலையாக இயங்கி வந்துள்ளது.
குறித்த கட்டடத்தை, ஹட்டன் வலய கல்வி பணிமனையிடம் இருந்து, நுவரெலியா மாவட்ட செயலாளர் உத்தியோகபூர்வமாக பெற்ற நிலையில், வெஞ்சர் யோகட் நிருவனத்தை நடத்த வழங்கப்பட்டுள்ளது.