சிறீலங்கா பொதுஜன பெரமுன அமைக்கவுள்ள புதிய கூட்டணி!

0
145

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் மொட்டுக் கட்சியின் நடவடிக்கை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மாவட்டத் தலைவர் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு வழங்கப்பட்டது.
குழு உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்தியா சிறிவர்தன மற்றும் ஆனந்த ஹரிச்சந்திர ஆகியோர் இந்த அறிக்கையை இன்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அமைச்சரிடம் கையளித்தார்கள்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கம்பஹா மாவட்டத்தின் நடவடிக்கை எவ்வாறு தொடர வேண்டும் என்பதை அறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.