சிறுமியை வன்புணர்ந்த குற்றவாளிக்கு ஆண்மை நீக்கம்!

0
2

சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய  வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு  அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கரில்  தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இமெரின்சியாடோசிகா பகுதியில் ஆறு வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்தி  அவரை கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையின் நிறைவில் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். 
 

விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு நீதிமன்றத்தால் கடூழிய தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஆண்மை நீக்கம் செய்யுமாரும் உத்தரவிட்டபட்டது.