சிறுமி மீது பாலியல் சேட்டை புரிந்த முதியவர் கைது!

0
29

சிறுமி மீது பாலியல் சேட்டை செய்தமை தொடர்பில், அம்பாறை சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனைப் பகுதியில், அதிஸ்ட இலாபச் சீட்டு விற்பனை செய்யும் 69 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டிற்கமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வீரமுனை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதிஸ்ட இலாப சீட்டு விற்பனை செய்பவர் என பொலிஸாரின்
விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.