மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜெரி நிறுவனத்தினால் முன்னெடுத்து வரும் சிறுவர் சினேக நகர திட்டத்தின் சிறுவர்களுக்கான பாதுகாப்பான சூழல் மற்றும் சிறந்த நகரத்தை உருவாக்கும் மீளாய்வு கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
தொடர்ந்து சிறுவர் சினேக நகர திட்டத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டினை மேம்படுத்தி சிறுவர்களுக்கு பாதுகாப்பான
சூழலையும் நகரத்தையும் உருவாக்கி கொடுப்பதற்கான உள்ளூராட்சி மன்ற அர்ப்பணிப்பு குழு உறுப்பினர்களுக்கான திறன் விருத்திதொடர்பான மீளாய்வு செயலமர்வு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
ஜெரி நிறுவனத்தின் தேசிய இயக்குனர் வி.தர்சன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என் .மணிவண்ணன் , மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ் .பிரகாஷ் , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , மாநகர ஆணையாளர் என் ,மதிவண்ணன் ,பிரதி ஆணையாளர் உட்பட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் ,உள்ளூராட்சி அர்ப்பணிப்பு குழு உறுப்பினர்கள் , யுனிசெப் சிறுவர் சினேக நகர திட்ட இணைப்பாளர் கியோரெஹ் யுனிசெப் சிறுவர் சினேக நகர திட்ட ஆலோசகர் டில் ருக்சி , ஜெரி நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
யுனிசெப் மற்றும் ஜெரி நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த மூன்று வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை ,ஏறாவூர் நகர சபை , கொக்கட்டிச்சோலை பிரதேச சபை ,வெல்லாவெளி பிரதேச சபை ஆகிய நான்கு உளூராட்சி மன்றங்களில் சிறுவர் சினேக நகர திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.