உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிசாரினால் இராஜகிராமம் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. உலக சிறுவர் தினம் எதிர்வரும் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று மாலை நெல்லியடி பொலிசாரினால் இராஜகிராமம் முன்பள்ளியில் வைத்து சிறார்களிற்கு கற்றல்
உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் ரட்ணாயக்க ஆகியோரும் பங்கேற்றனர்.