‘உலகம் சிறுவர்களுக்கானது அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம்’ என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்த சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘ஏழ்மை, போசாக்குக் குறைபாடு, சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வியில் ஏற்றாத்தாழ்வு, சமூக வாய்ப்புக்களில் ஏற்றத்தாழ்வு, போதைப்பொருள் அத்துடன் தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாட்டிற்கு பலியாவது போன்றன இந்த மிலேனியத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
மேலும் சிறுவர்களின் உளவியல் சமூக வளர்ச்சியைத் தடுக்கும் சமூக விளைவுகள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைகள் போன்ற தாக்கங்களில் இருந்து தற்போதைய தலைமுறைச் சிறுவர் சமூகத்தை விடுவித்து பிள்ளைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதே மறுமலர்ச்சிக் காலப் பணியின் முக்கிய குறிக்கோள்’ என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.