திருகோணமலையில் சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் கவிந்திர பிரேமவன்ச தலைமையில், திருகோணமலை சிறைச்சாலையும், இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய அமைப்பும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.
மரண தண்டனை, மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கே கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருகோணமலை சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் தலைவர் சீ.டி. பாஸ்கரன், இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய கிழக்கு மாகாண பிராந்திய ஒருங்கிணைப்பாளர் எஸ் ரவீந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.